[ad_1]
இக்கட்டுரை தமிழிலும் பதிவிடப்பட்டுள்ளது.
Over the years, I found myself making less ambitious choices with respect to my studies and career, because I feared that I may not be able to meet the demands of ambitious choices. Eventually, when I quit my Software Engineer position at Novell, it was for the same reason. I could not do justice to my work and my family. This might be a refrain that many women might identify with.
After quitting the job, I explored a few different fields for a couple of years. Eventually, I registered for a PhD thinking that I’d fit into the academia. However, by the time I finished it, I was not willing to work at any University. With an Engineering College a few metres away from my home, many of my friends and neighbours suggested that I should try to get a position there, but I was adamant that I shall not go for it, as the rules and restrictions of a typical college environment in South India did not resonate with me.
At the Crossroads
Due to some nagging health issues and two young children – one a new-born, I was very keen on doing something on my own terms. But my options were minimal. It was at this time, that I felt like a beautifully crafted Veena which got eventually trashed.
My favourite Tamil poet Bharathi wrote these lines asking the Supreme power why She chose to craft a beautiful Veena only to trash it. He was referring to the potential and intelligence in him that he was wasting away. He prayed to be empowered to live a useful life.
I would repeat his lines and wonder why I couldn’t make something useful out of my life, out of all the knowledge I had gathered, out of all the skills I had spent hundreds of hours to hone. I wondered if I was being stubborn by not choosing the path of least resistance – working for the nearby educational institution.
In my mid-thirties, armed with a PhD in Natural Language Processing(NLP), and scattered experiences in various areas of software, my other options were minimal. After intense introspection and googling, I realized that I could try a remote job as a last resort. The WordPress ecosystem seemed to be full of remote positions, but I did not have the skills for it. Till then, I had in-depth understanding and command over C, Perl, the Unix OS and the command line utilities. As far as web development was concerned, I had the experience of writing hardcoded html home pages(some of you might remember this era) a decade before.
Starting Fresh
At this juncture, I had a choice to look for some work with my then skillsets and qualifications, given my constraints, or to start from scratch on web development. I chose to do the latter.
The lines from Rudyard Kipling’s If were my mantra in those days.
If you can make one heap of all your winnings
And risk it on one turn of pitch-and-toss,
And lose, and start again at your beginnings
And never breathe a word about your loss;
Of course, I was feeling quite bad about my loss, the loss of NLP from my day-to-day work. But it was important for me to do something with my skills than to be very selective about what I was doing, as I was not willing to compromise on the other conditions.
So, I set to work.
I started a couple of WordPress sites; One of them, a book review site PlusMinus’nMore, built on WordPress, became quite popular over a few years; I started a social startup named RAPO, to bring people together through books and wrote the application for it; I freelanced – wrote tutorials on WordPress and Linux, offered part-time support and documentation service for themes and plugins. My good friend, who was running her own venture using Zoho, outsourced any HTML/CSS sub-tasks to me; I contributed to WordPress Core and also offered Tamil Translations for plugins and themes. I wrote amateurish plugins and released them. I was willing to do anything to learn WordPress, as a user and as a developer. All of this happened at the comfort of my home, without having to compromise on the care I gave for my children.
However, freelancing soon became quite overwhelming because of the administrative overheads. Consequently, I started applying for remote positions. It was difficult to get a break because I was overqualified. It was a miracle that I got into ProsPress Inc. and suddenly, I found myself a remote developer working on WooCommerce Subscriptions.
After a couple of years, Automattic happened and I moved over to the Woo Data team. I still don’t do NLP in my day-today job, and my knowledge on the trends in NLP or ML is quite outdated. However, I am keeping my hopes alive and learning a lot on a range of things that I work on everyday – Payments, the Hadoop ecosystem and Functional Programming in Scala to name a few.
Today, I have relocated to Dubai thanks to my remote job. I am glad that I chose the WordPress ecosystem because it has given me what I wanted and more.
Lessons To Take Away
What I learnt from these events and what I frequently remind myself of:
- The past is gone. The present and future are in my hands. I can always start afresh and find meaning from the rest of my life.
- It is important to keep choosing what I enjoy doing, without looking for rewards, even if it does not make sense always. I shall be able to connect the dots later.
So, my dear reader, where ever you are in the world, whatever your current situation might be, especially if you’re a mom who had a high-flying career which you had to let go off, I hope my story inspires you to remember that the present and the future are in your hands, if you’re not reluctant to start afresh. Do your duty towards your family, but do not compromise on what you want out of life. Keep walking the journey and the future will present options that you never dreamt of.
என் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்போது, பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும்போதும் சரி, அல்லது வேலையில் இருக்கும்போதும் சரி, பல முறை என் ஆற்றலுக்கேற்றவற்றைத் தவிர்த்து, எளியவற்றைத் தேர்ந்தெடுத்துள்ளேன். உள்ளூர, என்னால் மிக உன்னதமான குறிக்கோள்களை மேற்கொண்டு செவ்வனே செய்ய முடியுமா என்ற ஐயமும், குடும்பத்தைப் புறக்கணித்து விடுவேனோ என்ற பயமும் தான் காரணம். நோவெல் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளர் வேலையை ராஜினாமா செய்ததும் இக்காரணத்தால்தான். இது பல பெண்களுக்கு எங்கேயோ கேட்ட பல்லவியாக இருக்கக்கூடும்.
வேலையை விட்டவுடன், சும்மா இருக்க விருப்பமில்லாமல் சில தொழில்-சார்ந்த படிப்புகளை ஆராய்ந்து, இறுதியாக முனைவர் பட்டத்துக்குப் பதிவு செய்தேன். ஆனால் அதை முடிக்கும்போது எனக்கு எந்தப் பல்கலைக்கழகத்திலும் வேலை பார்க்க விருப்பமில்லை. என் வீட்டிற்கு அருகிலேயே ஒரு தொழில்நுட்பக்கல்லூரி இருந்ததால், என் நண்பர்களும் அண்டை வீட்டாரும் அதில் விண்ணப்பிக்குமாறு பரிந்துரைத்தனார். ஆனால் எனக்கு தென்னிந்தியக் கல்லூரிகளின் விதிகளும் கட்டுப்பாடுகளும் தரும் ஒவ்வாமையால் அதைத் தவிர்த்துவிட்டேன்.
நல்லதோர் வீணை
சில நாள்பட்ட உடலூறுகள், மற்றும் இரு சிறு குழந்தைகளின் பராமரிப்பு என்ற இருவேறு காரணங்களால் நான் என் நிபந்தனைகளுக்குட்பட்ட ஏதாவது செய்யவேண்டும் என்பதில் குறியாக இருந்தேன். ஆனால் எனக்கு ஒரு வழியும் தென்படவில்லை.
என் அனுக்கக் கவி பாரதி, சிவசக்தியிடம்
“நல்லதோர் வீணை செய்தே, அதை நலம்கெட புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடீ சிவசக்தி, எனைச் சுடர்மிகுமறிவுடன் படைத்துவிட்டாய்!
வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே!”
என்று முறையிட்ட வரிகள் என்னுள் எப்பொழுதும் ரீங்காரமிட்டுக்கொண்டிருந்தன. அந்த வரிகளில் நான் என்னைக் கண்டேன். எத்தனையோ விஷயங்களைக் கற்றும், பல நூறு மணி நேரங்கள் பாடுபட்டு வளர்த்துக்கொண்ட திறன்கள் இருந்தும், அவை யாருக்கும் பயனற்றுப் போவதாகத் தோன்றியது. ஒருவேளை அது கல்லூரியில் வேலை பார்க்க மாட்டேன் என்ற என் பிடிவாதத்தால் தானோ என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன்.
முப்பத்தைந்து வயதில், முனைவர் பட்டம் மற்றும் மென்பொருள் அனுபவம் வைத்துக்கொண்டு வேறு என்ன செய்யமுடியும் என்று யோசித்தேன். மிகுந்த ஆராய்ச்சிக்குப் பின், வீட்டிலிருந்து செய்யக்கூடிய இணையவழி வேலைகள் பற்றி அறிந்து கொண்டேன். வர்ட்ப்ரெஸ்(WordPress) தொடர்பான வேலைகள் பலவும் இப்படிப்பட்டவையாக இருந்தன. ஆனால் எனக்கு இணைய மென்பொருள் உருவாக்கத்தில்(Web development) எந்தவொரு அனுபவமும் கிடையாது. எனக்குத் தெரிந்ததெல்லாம் சி(C), பேர்ல்(Perl), யூனிக்ஸ்(Unix) மட்டுமே.
புதிய பாதை
இந்தக் கட்டத்தில், ஒன்று, நான் என் படிப்பு மற்றும் தகுதிகளுக்கேற்ற வேலை செய்யலாம் அல்லது வர்ட்ப்ரெஸ்ஸைப் புதிதாகக் கற்றுக்கொண்டு வேலை தேடலாம். நான் வர்ட்ப்ரெஸ்ஸைத் தேர்ந்தெடுத்தேன்.
ஆங்கில எழுத்தாளர் ருட்யார்ட் கிப்ளிங்கின் (Rudyard Kipling) ‘இஃப்’ (If) என்ற கவிதையின் சில வரிகள் என் நினைவுக்கு வந்தன. “ஒருவேளை, உன் வாழ்க்கையின் எல்லா வெற்றிகளையும் மூட்டைக்கட்டி சூதாடி, ஒரே சுண்டில் அவற்றையெல்லாம் இழந்துவிட்டு, மீண்டும் முதல் படியிலிருந்து தொடங்கி, உன் இழப்புகளைப் பற்றி யாரித்திடமும் புலம்பாமால் இருக்கமுடியுமானால் நீ உன் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்”, என்ற அந்த வரிகளே எனக்குத் தாரக மந்திரமானது.
வெகுவாக புலம்பவில்லை என்றாலும், உள்ளுக்குள் வலித்தது. ஆனால் நான் விட்டுக்கொடுக்க விரும்பாத சில நிபந்தனைகள் வைத்திருந்ததால், இது ஒன்றே முன்னேறும் வழி என்று முடிவெடுத்தேன்.
செயலில் இறங்கினேன்.
சில வர்ட்ப்ரெஸ் தளங்களை உருவாக்கினேன். PlusMinus’nMore என்னும் புத்தக விமர்சன தளமும் அதில் ஒன்று. மூன்று வருடங்களுக்கு அது சிறப்பாக செயல்பட்டது. நண்பர்கள் குழுவுடன் சேர்ந்து RAPO எனும் சமூக நிறுவனத்தை உருவாக்கி அதன் மூலம் மக்களை ஒருங்கிணைக்க முயன்றோம். வர்ட்ப்ரெஸ் மற்றும் லினக்ஸ் தொடர்ப்பான பயிற்சிக்கட்டுரைகள் எழுதி இணையத்தில் பதிவிட்டேன். பகுதிநேர வேலையாக, வர்ட்ப்ரெஸ் சார்ந்த இணைப்புச் செயலிகளுக்கு ஆவணமாக்கம் மற்றும் வாடிக்கையாளர் உதவி போன்ற வேலைகளை ஏற்றுக்கொண்டேன். என் தோழி, தன் நிறுவனத்தின் வேலைகளில் HTML/CSS பாகங்களை எனக்கு அளித்தார். வர்ட்ப்ரெஸ் உள்ளகத்திற்கு மென்பொருள் மற்றும் இணைப்புச் செயலிகளுக்கு தமிழ் மொழிமாற்றம் போன்றவற்றில் பங்களித்தேன். என் வீட்டின் வசதியான சூழலில் இருந்துகொண்டே, குழந்தைகள் நலத்தைப் பேணிக்கொண்டே, வர்ட்ப்ரெஸ்ஸைக் கற்றுக்கொள்ள முடிந்தது.
ஆனால் நாளடைவில் நிர்வாக மேல்வேலைகள் அதிகரித்ததால், இப்படிப் பலவற்றை செய்வது கடினமாயிற்று. எனவே நான் முழுநேர இணையவழி வேலைகளுக்கு விண்ணப்பிக்கத்தொடங்கினேன். என் முனைவர் பட்டம் இவ்வேலைகளுக்கு என்னை மிகையான தகுதியுடையவளாக்கின. கடைசியில் ப்ராஸ்ப்ரெஸ்(ProsPress Inc.) என்னும் நிறுவனத்தில் வேலை கிடைத்தது ஒரு அற்புதம்தான். நான் வூகாமர்ஸ் சபஸ்க்ரிப்ஷன்ஸ்(WooCommerce Subscriptions) என்னும் மின்வர்த்தக சந்தாக்கள் இணைப்புச் செயலியை உருவாக்கி நிர்வகிக்கும் வேலையை செய்யத்தொடங்கினேன்.
இரண்டு வருடங்களுக்குப் பின், ப்ராஸ்ப்ரெஸ் ஆட்டோமேட்டிக்(Automattic) நிறுவனத்துடன் இணைந்ததால், நான் வூடாட்டா(WooData) என்னும் வூகாமர்ஸ்(WooCommerce) சார்ந்த தரவுகளை ஆராயும் குழுவில் சேர்ந்தேன். இப்பொழுதும் என் ஆராய்ச்சித் தலைப்பு தொடர்பான வேலையில் நான் முழுமையாக ஈடுபடவில்லையென்றாலும், அவற்றைக் குறித்த என் அறிவு பத்து வருடங்கள் பின்தங்கியவையென்றாலும், நம்பிக்கை இழக்காமல் தினமும் என் வேலையில் கொடுப்பனவுகள், Hadoop, Scala மற்றும் Functional Programming போன்ற பல புதுப்புது விஷயங்களைக் கற்றுக்கொண்டிருக்கிறேன்.
இணைய வழி வேலையின் உபயத்தால் நான் இப்போது துபாயில் வாழ்கிறேன். நான் வர்ட்ப்ரெஸ்ஸைத் தேர்ந்தெடுத்தது குறித்து இன்று எனக்கு மிகவும் திருப்தியாக உள்ளது. ஏனெனில் அது என் விருப்பத்திற்கு மிகுதியாகவே எனக்கு அளித்துள்ளது.
கற்ற பாடங்கள்
இந்த நிகழ்வுகள் மூலம் நான் கற்றுக்கொண்டவையாவன:
-
கடந்த காலம் கடந்துவிட்டது. நிகழ்காலமும் எதிர்காலமும் என் கையில்.
எப்பொழுது வேண்டுமானாலும் நான் என்னைப் புதுப்பித்துக்கொண்டு என் எஞ்சிய வாழ்க்கையை அர்த்தமானதாக்கலாம் -
எனக்கு விருப்பமுள்ளவற்றை –– ஏனென்று புரியவில்லையென்றாலும்,
எந்தவொரு எதிர்பார்ப்பும் இன்றித் தேர்ந்தெடுத்து அவற்றைச் செய்து கொண்டே இருப்பது மிகவும் முக்கியம்.
பின்னால் அவற்றின் பொருள் புரியக்கூடும்.
எனவே, என் அன்பு வாசகர்களே! நீங்கள் இவ்வுலகின் எந்த மூலையிலிருந்தாலும், உங்கள் தற்போதைய நிலை எதுவாயினும், குறிப்பாக பிடித்தமான வேலையைத் தியாகம் செய்த தாயானால், என் கதை உங்களுக்கு ஊக்கமளிக்கும் என்று நம்புகிறேன். நிகழ்காலமும் எதிர்காலமும் உங்கள் கையில். எவ்விதத் தயக்கமும் இன்றி, புதிய முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். உங்கள் அன்றாட கடமைகளை நிறைவேற்றலாம்; ஆனால் உங்கள் வாழ்க்கைக்கு அணையிட வேண்டாம். அடி மேல் அடி வைத்து முன்னேறுங்கள். எதிர்காலம் நீங்கள் கனவிலும் காணாத வாய்ப்புகளை நிச்சயமாக வழங்கும்.
Related
[ad_2]
Source link